தமிழகத்தை பொருத்தவரை நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்றும் திராவிட கட்சிகளின் மாயையில் இருந்து இன்னும் தமிழகம் மீளவில்லை என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைத்திருப்பதாக நேற்று தமிழகஅந்த உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் குறைந்தது 5 எம்பி சீட்டுகள் பாஜகவுக்கு கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்றும் பாஜகவால் பெரிய அளவில் தமிழகத்தில் சாதிக்க முடியாது என்றும் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்
ஆனால் அதே நேரத்தில் பாஜகவுக்கு முன்பு விட அதிக ஓட்டு சதவீதம் கிடைக்கும் என்றும் திராவிட கட்சிகளின் மாயையில் இருந்து இன்னும் தமிழகம் மீளவில்லை என்றும் அதற்கு இன்னும் சில ஆண்டுகள் காலம் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.