உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் தனது தவறை எண்ணி வருந்தி போலீஸாரிடம் கதறி அழுத்துள்ளார்.
முன்பகைக் காரணமக நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை செய்ததில் திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.
கார்த்திகேயனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பலனாக இந்த வழக்கில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் உமா மகேஸ்வரி வீட்டில் திருடு போயிருந்த நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையில் கொலையான வேலைக்காரப் பெண் மாரியம்மாள் குறித்து கார்த்திகேயன் வருத்தப்பட்டு அழுததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,
எனக்கு வேலைக்கார பெண்ணை கொலை செய்யும் எண்ணம் இல்லை. உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவரைதான் கொலை செய்தேன். ஆனால், மாரியம்மாள் சம்பவ இடத்திற்கு வந்து பயத்தில் கூச்சலிட்டார். நான் முதலில் ஓடிப் போய்விடு என்று கோபமாய் கத்தினேன். ஆனால் அவள் கிளம்பவில்லை.
எனவே, வேறு வழியில்லாமல் அவள் என்னை காட்டிக் கொடுத்து விடுவாளோ என்ற எண்ணத்தில் அவளையும் குத்திக் கொன்றேன். அப்போது கூட அவள், எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் என கதறினாள். மூன்று பேரும் ஆண் பிள்ளைகளாக இருப்பார்கள் என எண்ணி கொலை செய்தேன்.
இப்போதுதான் தெரிகிறது அவளுக்கு மூன்றும் பெண் குழந்தைகள் என்று கார்த்திகேயன் கதறி அழுததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.