கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து குறித்து விசாரிக்க 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து புறப்பட்ட பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் அருகே கவரைப்பேட்டையில் சென்றுக் கொண்டிருந்தபோது சிக்னல் கோளாறால் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் 19 பேர் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தவறான சிக்னல் அளிக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் விபத்து குறித்த விசாரணைக்காக 13 ரயில்வே ஊழியர்களுக்கு சென்னை கோட்ட மேலாளர் சம்மன் அனுப்பியுள்ளார். கவரைப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட், உதவி லோகோ பைலட், மோட்டார் மேன், கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரி உள்பட 13 ஊழியர்களுக்கு இன்று மாலை தெற்கு ரயில்வே அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்கு பின் விபத்திற்கான காரணம் குறித்த விரிவான விவரங்களை ரயில்வே வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K