கோவை ஈஷா மையத்தில் உள்ள தனது மகள்களை மீட்டுத் தரக்கோரி தந்தையின் ஆட்கொணர்வு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்த நிலையில் ஈஷா தரப்பு செய்த வாதம் பின்வருமாறு:
அந்த இரு பெண்களும் தங்களின் விருப்பத்தில் ஈஷா மையத்தில் தங்கியுள்ளதாக போலீசார் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது தந்தை மீதும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர் என கூறியது
இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பு வாதிட்டபோது, ஈஷா விவகாரத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விசாரணை செய்ய தடை விதிக்கக் கூடாது என கூறியது
அப்போது நீதிபதிகள், நிலுவை வழக்குகளை சட்டப் படி விசாரிக்க எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இந்த வழக்கு விசாரணை ஆட்கொணர்வு மனு தொடர்பானது என்று கூறினார்.
அதன்பின்னர் தலைமை நீதிபதி கூறியபோது, 2 பெண்களும் தங்களது விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அங்கு தொடர்ந்து தங்க விருப்பம் தெரிவித்துள்ளதால் இந்த ஆட்கொணர்வு மனுவின் விசாரணையை தொடர்வதில் முகாந்திரம் இல்லை. வேறு எந்த புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு குறுக்கீடாக இருக்காது" என்று கூறினார்.