எல்.முருகன் சவாலுக்கு பதிலடி கொடுத்த கே.எஸ்.அழகிரி!
தமிழக பாஜக தலைமை இடத்தை ரூ.30 கோடிக்கு வாங்கிக்கொள்ள கே.எஸ்.அழகிரி தயாரா? என பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளதை அடுத்து அதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி கொடுத்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய விலையையும் இப்போதிருக்கிற சந்தை மதிப்பையும் ஒன்றுபடுத்திப் கே.எஸ்.அழகிரி பேசியிருப்பதாகவும், 30 கோடி என்று எந்த அடிப்படையில் நிர்ணயம் செய்தார் என்று தெரியவில்லை என்றும், அவர் குறிப்பிட்டுள்ள படி ரூ.30 கோடிக்கு நாங்கள் இடத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றும், அவர் வாங்கிக்கொள்ள தயாரா? என்றும் நேற்று பாஜக தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி சவால் விடுத்திருந்தார்.
இந்த சவாலுக்கு பதிலடி தரும் வகையில் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: 30 கோடி கொடுத்து கமலாலயத்தை கேஎஸ் அழகிரி அவர்கள் வாங்க தயாரா? என்று நண்பர் பாரதிய ஜனதா தலைவர் முருகன் கேட்டிருக்கின்றார். 20,000 கோடி கொடுத்து காமராஜர் அறக்கட்டளையை முருகன் வாங்குவார் என்று சொன்னால் காங்கிரஸ் கட்சியும் 30 கோடி கொடுத்து கமலாலயத்தை நிச்சயமாக வாங்கும்
இரண்டாவதாக ஒன்றை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். முருகன் எவ்வளவு தொகை கொடுத்தும் வாங்க முடியும். காரணம் அவர்களிடம் பிஎம் கேர்ஸ் இருக்கின்றது. எங்களிடம் அதெல்லாம் இல்லை. எங்களிடம் காமராஜர் விட்டுச்சென்ற நேர்மையும் எளிமையும் தான் இருக்கின்றது. அவர் புரிந்து கொள்வார் என்று கருதுகிறேன் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார்