தமிழகத்தில் நூலகங்கள் செயல்பட அனுமதி: என்னென்ன நிபந்தனைகள்?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இருப்பினும் ஜூன் மாதத்திலிருந்து ஒரு சில தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தளர்வாக தமிழகத்தில் நூலகங்கள் செயல்பட அனுமதி அளித்துள்ளது இதுகுறித்து நூலகத்துறை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’செப்டம்பர் 1ம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது
மேலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு பொது நூலகங்களில் வர அனுமதி இல்லை என்றும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நூலகங்கள் செயல்படும் என்றும் அறிவித்துள்ளது
ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த நூலகங்கள் தற்போது மீண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக வெளிவந்துள்ள அறிவிப்பு புத்தக பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது
இதேபோல் ஒவ்வொன்றாக தளர்வுகள் அடிப்படையில் திறக்கப்பட்டு தமிழகம் மீண்டும் இயல்பு நிலையை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது