மக்களிடம் பக்தி குறைந்தது திடீர் மழைக்கு காரணம் என மதுரை ஆதீனம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை உள்பட வட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மையம் சென்னை அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு ஆந்திரா பக்கம் திரும்பிவிட்டதால், சென்னை உள்பட தமிழகம் கனமழையிலிருந்து தப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கன மழை குறித்தும், காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகுவது குறித்தும் அவ்வப்போது வானிலை ஆய்வு மையங்கள் விஞ்ஞான முறையில் தகவல்களை தெரிவித்து வரும் நிலையில், மதுரை ஆதீனம் மக்களிடையே பக்தி குறைந்ததே திடீர் மழைக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் குத்தக தொகையை முறையாக தராததால் பருவம் தவறி மழை பெய்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதத்தை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு சிறப்பாக கவனித்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.