சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு மதுரையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரையில் தமிழ்நாடு முழுவதும் பல கோவில்களிலும் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. பல ஊர்களிலும் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம், திருவிழாக்கள் நடந்து வருகிறது. சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்வாக பார்க்கப்படுவது மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு.
இதை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் மதுரை செல்வது வாடிக்கை. இந்த ஆண்டு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே 5ம் தேதியன்று நடைபெற உள்ளது. இதனால் மே 5 மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார் மதுரை ஆட்சியர்.
கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை காண ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.