நீதிமன்றத்தை ஏமாற்ற முயற்சி செய்ய வேண்டாம் என தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
தற்காலிக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியத்தை தாமதிப்பது, வழங்க மறுப்பது நல்ல செயல் அல்ல என்று கூறிய நீதிபதி, தற்காலிக ஊழியர்கள் அதிகாரிகளிடம் பிச்சை கேட்கவில்லை என்று,ம் செய்த பணிக்கு உரிய ஊதியத்தை மட்டுமே கேட்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப நேரிடும் என்றும், நீதிமன்றத்தை ஏமாற்ற நினைக்காதீர்கள் என்றும், நீதிமன்றத்திற்கு சக்தி இல்லை எனக்கு கருதாதீர்கள் என்றும் தெரிவித்தார்.
நீதிமன்றம் உத்தரவிட்டு 4 ஆண்டுகள் ஆகியும் மதுரை அரசு போக்குவரத்துக் கழக தற்காலிக ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்காதது தொடர்பான வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி இந்த கருத்தை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.