சென்னை மந்தைவெளி ரயில் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அந்த பகுதி பாதிப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஊரடங்கு இந்த வார இறுதியோடு முடிய இருக்கும் நிலையில் பேருந்து மற்றும் ரயில்சேவைகள் மீண்டும் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மந்தைவெளி ரயில் நிலையத்தில் பணிபுரிந்த 5 காவலர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
உடனடியாக மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் மந்தைவெளி பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மந்தைவெளி தடத்தில் ரயில்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதார விதிகளின்படி அங்கு 28 நாட்களுக்கு தடை தொடரும் என்பதால் கடற்கரை முதல் வேளச்சேசி வரை மந்தைவெளி மார்க்கமாக செயல்படும் அனைத்து ரயில்சேவைகளும் தடைபடும் என கூறப்படுகிறது.