Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

Stalin

Senthil Velan

, திங்கள், 23 செப்டம்பர் 2024 (13:44 IST)
தஞ்சை, சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். 
 
தொழில்துறை சார்பில் தமிழகத்தில் சிறுநகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு செல்லும் நோக்கில், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் தாலுகா, பிள்ளையார்பட்டி கிராமத்தில் ரூ.30.50 கோடி மதிப்பிலும், சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, ஆனைக்கவுண்டன் பட்டி மற்றும் கருப்பூர் கிராமத்தில் ரூ.29.50 கோடி மதிப்பிலும் கட்டப்பட்டுள்ளன.
 
இந்த மினி டைடல் பூங்காக்களை  சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி வழியே திறந்து வைத்தார். மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் ரூ.4.66 கோடியில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக்கூடம், ரூ.17.04 கோடியில் கட்டப்பட்டுள்ள 4 சேமிப்புக் கிடங்கு வளாகங்களை காணொலி வழியே திறந்து வைத்தார்.
 
ரூ.36.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 58 நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடங்கள் மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.15.22 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தார். இதுதவிர, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் 110 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

 
தொடர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில், அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக உதவி வனப்பாதுகாவலர் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்கும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவிப்பொறியாளர் பணியிடத்துக்கு தேர்வுசெய்யப்பட்ட 48 பேரில் 5 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?