மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என அமைச்சர் ஜெயகுமார் விளக்கியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் சசிகலா. இந்நிலையில் வருமான வரித்துறை அவர் மீதான சில சொத்து குறித்த குற்றசாட்டுகளுக்கு பதில் அளிக்கும்படி கேட்டிருந்தது.
இதற்கு சசிகலா தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பணமதிப்பிழப்பு நோட்டு பற்றியும், அதை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்கள் பற்று எந்த தகவலும் தெரியாத என தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெயலலிதாவுக்கு சொந்தம் என்று கூறப்படும் கொடநாடு எஸ்டேட், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயா பிரிண்டர்ஸ், ஜெயா பார்ம் ஹவுஸ், ஜெ.எஸ் ஹவுசின்ஹ் டெவலப்மெண்ட், ஜெய் ரியல் எஸ்டேட், கிரீன் பார்ம் ஹவுஸ் ஆகிவற்றில் பங்கு இருக்கிறது. அவை எனக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமாரிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகள் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும். இது குறித்து இப்போது பேசுவதில் அர்த்தம் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.