கொரோனா காரணமாக தமிழகத்தில் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் 75% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாகவே கல்லூரிகள் நடைபெறாத சூழல் உள்ளது. இடையே சில வாரங்கள் கல்லூரிகள் திறக்கப்பட்டபோதும் இரண்டாம் அலை பரவலால் மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெற்று வந்தன.
இந்நிலையில் தனியார் கல்லூரிகள் முழு கட்டணம் மாணவர்களிடம் வசூலிக்க கூடாது என்றும், 75 % கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் பொன்முடி தனியார் கல்லூரிகள் 75% கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், முழு கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் குறித்து மாணவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.