மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளாதது குறித்து பரவிய பொய் செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்ட நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து அவர் விளக்கம் அளித்ததாக போலியான செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தனது கொளுந்தியாள் மகள் நீராட்டு விழாவில் கலந்து கொள்ள இருப்பதால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு செல்லாததாக அவர் கூறியதாக உள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள அமைச்சர் பிடிஆர் “வடிகட்டிய முட்டாள்தனம். கூட்டம் நடந்தது டெல்லியில் இல்லை லக்னோவில். எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும்? பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மூளை கெட்டுப் போனவர்களா” என்று ஆவேசமாக பதிலளித்துள்ளார்.