அரசியலுக்கு வர ரஜினி காலதாமதப்படுத்திவிட்டார் என திமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்து வரும் சூழலில், அரசியல் கட்சிகளுக்கு இடையேயான மோதல் போக்கும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் அதிமுகவுக்கு தனித்து நிற்க பலமில்லை என்று பேசி வருகின்றனர். புதிய கட்சி தொடங்கியவர்களும், தொடங்க இருப்பவர்களும் கூட அரசியல் வெற்றிடம் இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.
இவர்களுக்கெல்லாம் பதில் சொல்வதே அதிமுக அமைச்சர்கள் அதிகப்பட்ச வேலையாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு அமைச்சரும் அவரவர்க்கு ஆளுக்கொன்று பேசுவது கட்சியினரையே குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறது. அதிமுக மீது எந்த விமர்சனங்கள் வந்தாலும் உடனே வாண்டடாக சென்று பதிலளிப்பவர்கள் ராஜேந்திர பாலாஜி மற்றும் ஜெயக்குமார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட அதிமுக தயார். அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் யாருக்கு பலம் என்பது தெரிந்துவிடும் என்று கூறியிருக்கிறார்.
அதோடு, ரஜினி அரசியலுக்கு வர காலதாமஹப்படுத்திவிட்டார். இனி அரசியலுக்கு அவர் வந்தால் சரிவராது. ரஜினி என்ன முடிவு எடுப்பார் என பொறுத்திருந்து பார்ப்போம். ரஜினியும், கமலும் ஒன்று சேர்ந்தாலும் அவரது ரசிகர்கள் சேரமாட்டார்கள். ரஜினி, கமல் ஒரு முடிவு எடுத்தால் மக்கள் ஒரு முடிவு எடுப்பார்கள் என பேசியுள்ளார்.