முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்வதில் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்தது. இதுகுறித்து பொதுவெளியில் அதிமுக அமைச்சர்கள் சிலர் ஆளுக்கொரு கருத்து கூறியதால் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழ தொடங்கியது.
இதன் பின்னர் அமைச்சர்களுடன் தனித்தனியே அலோசனை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பின்னர் கூட்டாக இனி இது போன்று கட்சி குறித்தும் ஆட்சி குறித்தும் தன்னிச்சையான கருத்துக்களை வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழகத்தின் பிரச்சினைக்குரிய கருத்துக்களை யாரும் பேச வேண்டாம் என்று கட்சியின் தலைமை உத்தரவிட்டு உள்ளது. அரசியல் தொடர்பான பிரச்சினைகளுக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்வதில் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.