எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவது குறித்து ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தே சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், கட்டுமான பணிகள் அடிக்கல் நாட்டிய நிலையிலேயே உள்ளதாக கூறப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பெறப்பட்ட நிலப்பகுதியில் சுற்றுசுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவது குறித்து ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார், 5 ஆண்டுக் காலத்தில் தற்போது எய்ம்ஸ் மதுரைக்கு வருமா? வராதா? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. வரும் என்று நாங்கள் போஸ்டர் ஒட்டினால், எதிர்க்கட்சிகள் வராது என போஸ்டர் ஒட்டுகிறார்கள்.
நாட்டின் உச்சபட்ச அதிகாரமாக்க மோடி மற்றும் மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அனைவராலும் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் அமையவில்லை என்பது எல்லோருக்கும் வருத்தம் தான். எய்ம்ஸ் மருத்துவமனை அமைய நிதி வழங்கும் ஜப்பானிய நிறுவனம் பல முறை ஆய்வு செய்து உரிமம் பெறுவதற்குத் தகுதியான இடம் இதுதான் எனச் சான்று கொடுத்து விட்டுச் சென்றுள்ளது.
ஜப்பானிய நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யும் காலத்தில் கொரோனா என்ற அரக்கன் வந்ததால் ஒப்பந்தம் செய்ய முடியாமல் போனது. விரைவில் ஒப்பந்தம் போடப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை வருமா? வராதா? என்று கேட்டவர்கள் கூட சிகிச்சை பெறக்கூடிய நிலை விரைவில் வந்துவிடும் என தெரிவித்துள்ளார்.