திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில், இன்று, காலை சிற்றுண்டித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கூறியிருந்தார்.
இந்த திட்டத்தின்படி, முதலில் மாநகராட்சி, நகராட்சி, தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்தாண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்காக ரூ.33. கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூறப்பட்டது.
இந்த நிலையில், காலை சிற்றுண்டித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இதுபற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மாணவர்களின் பள்ளி வருகையை அதிகரித்து, உடல்நலத்துடன் கூடிய கல்வியை உறுதி செய்ய, நம் மாண்புமிகு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வரும் கனவு திட்டங்களில் ஒன்றான காலை சிற்றுண்டித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆய்வு செய்தோம்.
அங்கு வழங்கப்படும் உணவை மாணவச் செல்வங்களுடன் அமர்ந்து சாப்பிட்ட போது, பள்ளியிலேயே வழங்கப்படும் காலை உணவு சிறப்பாக இருக்கிறது என மாணவர்கள் கூறியது மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தந்தது.
பசி நீக்கி அறிவு புகட்டும் இத்திட்டம் அனைவருக்குமான கல்வியை உறுதி செய்யும்! என்று தெரிவித்துள்ளார்.