பாமகவின் இடஒதுக்கீடு கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அதிமுக அமைச்சர் கூறியிருப்பது கூட்டணியை காப்பாற்றும் முயற்சியா என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளுக்கு தயராகி வருகின்றன. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், இதுகுறித்து வரும் புத்தாண்டில் மாபெரும் மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
பாமகவின் கோரிக்கை குறித்து தற்போது பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “வன்னியர் சமூகத்தினருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். இதுதொடர்பாக அரசு முடிவெடுக்கும்” என கூறியுள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு கூறியதை தொடர்ந்து தேர்தலில் கூட்டணியை நீட்டிக்க இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டுள்ளதா அல்லது கொரோனா காலத்தில் பெரும் மாநாடு நடத்தப்படுவதன் பாதிப்புகளை தவிர்க்க முன்கூட்டியே பரிசீலனை செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதா என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.