நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கும் ஆளுநருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு விலக்கு மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு நிலுவையில் உள்ளது என்றும் இந்த சூழலில் கையெழுத்து இட மாட்டேன் என ஆளுனர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கும் ஆளுநருக்கு இனிமேல் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார். முன்னதாக நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி, நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது