தனிக்கட்சி, ஆலோசனை கூட்டம் குறித்து முக அழகிரி தனது உதவியாளர் மூலம் தெளிவுப்படுத்தி உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் முதல்வர் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. இந்நிலையில் திமுகவிலிருந்து விலகிய அழகிரி தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் இருந்து விலகியது முதலாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருந்து வந்த அழகிரி தனது ஆதரவாளர்களுடன் 20ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படும் நிலையில், அழகிரி தனிக்கட்சி தொடங்கப்போவதாக பேசிக் கொள்ளப்படுகிறது. அதேசமயம் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் புதிய கட்சி தொடங்க வாய்ப்பில்லை எனவும், ஆனால் திமுகவின் வாக்குகளை பிரிக்கும் விதமாக பாஜக உள்ளிட்ட ஏதாவது ஒரு கட்சிக்கு அவரது ஆதரவை தெரிவிப்பார் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் 20ம் தேதி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அழகிரி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இவை அனைத்தையும் தவறான தகவல் என்று மு.க.அழகிரி தரப்பிலிருந்து தற்போது கூறப்பட்டுள்ளது. ஆம், இவை அனைத்தும் தவறான தகவல் என்று முக அழகிரி தனது உதவியாளர் மூலம் தெளிவுப்படுத்தி உள்ளார்.