குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க சத்தான உணவுகளை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவான DISHA வின் மாநில அளவிலான இரண்டாவது ஆய்வு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கிராமப்புற வாழ்வாதாரம் மற்றும் கட்டமைப்பின் முக்கியத்துவம் குறித்தும், கிராமப்புறங்களில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் எடுத்துரைத்தார்.
அப்போது அங்கன்வாடி மையங்கள் குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கன்வாடி மையங்களில் இதுவரை குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி வாரம் 3 முட்டைகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகள் தயாரித்து வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.