Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கிழிந்த சட்டையுடன் வெளிவந்த மு.க.ஸ்டாலின் - சட்டசபை வளாகத்தில் பரபரப்பு

கிழிந்த சட்டையுடன் வெளிவந்த மு.க.ஸ்டாலின் - சட்டசபை வளாகத்தில் பரபரப்பு
, சனி, 18 பிப்ரவரி 2017 (15:13 IST)
சட்டசபையினில் இருந்து கிழிந்த சட்டையுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியே வந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள், மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் கோரிக்கை வைத்தனர். ஆனால், அதை சபாநாயகர் ஏற்கவில்லை. எனவே, மற்றொரு நாளில், குறைந்த பட்சம் ஒரு வாரம் கழித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். ஆனால், அதையும் சபாநாயகரால் நிராகரித்தார்.
 
எனவே, திமுக எம்.எல்.ஏக்கள்  மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் சபாநாயகரின் இருக்கை முன்பு சென்று அமளியில் ஈடுபட்டனர். மேலும், அவரின் இருக்கை மற்றும் மைக் ஆகியவற்றை அவர்கள் உடைத்தனர். இதனால், அவையை ஒரு மணி வரை ஒத்தி வைத்து விட்டு, சபாநாயகர் சபையிலிருந்து வெளியேறினார். 
 
அதன் பின் ஒரு மணி நேரம் கழித்து பிற்பகல் 1 மணியளவில்  சட்டசபை மீண்டும் கூடியது. அப்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அவருக்கு ஆதரவாக திமுக எம்.எல்.ஏக்கள் கோஷம் இட்டனர். எனவே, திமுக எம்.எல்.எக்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். எனவே, அவர்களை வெளியேற்றும் பணியில் சட்டசபை ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால், வெளியேற மறுத்து திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். எனவே, அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. 

webdunia

 

 
அதில் மு.க.ஸ்டாலினின் சட்டை பல இடங்களில் கிழிந்து போனது. அதோடு அவர் சட்டசபையில் இருந்து வெளியேறினார். மேலும், அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் “ ரகசிய வாக்கெடுப்பு கோரி நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். னவே, அறவழியில் நாங்கள் போராட்டம் நடத்தினோம். அப்போது எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள். என் மீது தாக்குதலும் நடைபெற்றது”என பேட்டியளித்தார். மேலும், இதுபற்றி ஆளுநரிடம் புகார் தெரிவிப்பதாக கூறி அவர் ஆளுநர் மாளிகைக்கு சென்றுவிட்டார்.
 
கிழிந்த சட்டையுடன் அவர் வெளியே வந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூவத்தூர் விடுதி மூடப்பட்டது ; எங்கே செல்வார்கள் அதிமுக எம்.எல்.ஏக்கள்?