கல்வித்துறையில் மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்க ஒன்றுபட்டு செயல்பட 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த ஆய்வு அறிக்கையை முதல்வரிடம் வழங்கியிருந்தார்கள்.
இந்நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கல்வித்துறையில் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டியது அவசியம் எனவும், அதற்கு மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.