கொரோனா பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு உடைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் அலட்சியமாக இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு நோயாளிகளிடம் இருந்து தொற்று பரவி விடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை ஒரு முறை பய்ன்படுத்தியதும் பத்திரமாக அப்புறப்படுத்தி விட வேண்டும். ஆனால் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் செயல்படும், கொரோனா முகாமில் அந்த உடைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் அலட்சியமாக போட்டு வைத்துள்ளனர்.
இதனை அங்கிருக்கும் குரங்குகள் வந்து காட்டுக்குள் இழுத்து செல்கின்றனர். இதன் மூலம் மீண்டும் அந்த பகுதியில் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமென சொல்லப்படுகிறது. இது சம்மந்தமானப் புகைப்படங்கள் இணையத்தில் இப்போது பரவி வருகின்றன.