தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
, வியாழன், 26 அக்டோபர் 2017 (09:28 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் நேற்றோடு முடிவடைந்தது. எனவே, இன்று அல்லது நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. ஆனால், இன்று காலையே தமிழகத்தின் பல இடங்களிலும் மழை பெய்ய தொடங்கியது. இதன் மூலம் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது உறுதியாகியுள்ளது.
இந்த வருடம் கூடுதலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வழக்கமாக 44 செ.மீ மழை பெய்யும். வார இறுதி நாட்களில் பரவலாக மழை பெய்யும்.
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். அதேபோல், வருகிற 28ம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அதற்கான பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்