வடகிழக்கு பருவமழை இன்னும் 24 மணி நேரத்தில் விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தகவல்.
தமிழகத்தில் கடந்த சில மாதம் முதலாக வடகிழக்கு பருவக்காற்றால் தொடர் மழை பெய்து வந்தது. மேலும் வங்க கடலில் தொடர்ந்து அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் பல மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமான மழை பொழிந்தது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை இன்னும் 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தமிழகத்தில் இயல்பை விட 59% அதிக மழை பதிவாகியுள்ளது. 22 மாவட்டங்களில் மிக அதிக மழையும், 14 மாவட்டங்களில் அதிக மழையும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.