இன்றைய காலத்தின் எத்தனை நவீனங்கள் வந்தாலும் அதனை நமது வாழ்க்கைக்குத் தேவையானது எது ? எந்தெந்த சமயத்தில் அதைப் பயன்படுத்த வேண்டும் ! எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற நுண்ணறிவுடன் பயனபடுத்தினால் நமக்கு தொல்லை இல்லை.
தற்போது பேஸ்புக், வாட்ஸப்,டிக் டாக் போன்ற சமூக ஊடகங்கல் மலிந்துவிட்ட காலமிது. மக்கள் தம் பொழுதுபோக்குக்காக தினமும் அதில் மூழ்கிவிடுகின்றனர். சிலர் தவிர்க்க முடியாமல் அதற்கு அடிமையாகிவிடுவதால் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
தற்போது அதேபோல் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது.
கோவை அருகே உள்ள கோவைப்புதூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கு நந்தினி என்ற மனைவி இருந்தார்.
டிக்- டாக் மீடியாவில் அதிக நாட்டம் கொண்ட நந்தினி, அதில் அதிக வீடியோக்களை வெளியிட்டதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரம் கொண்ட கனகராஜ் , இதை நிறுத்திவிடுமாறு பலமுறை நந்தினியிடம் கூறியுள்ளார். ஆனார் இதைக்கேட்காமல் தொடர்ந்து டிக்- டாக்கில் வீடியோக்களை நந்தினின் வெளியிட்டு வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் இன்று இதுகுறித்து கனகராஜ் மனைவியிடம் கேட்டதில் , இருவருக்கும் வாக்குவாதம் எழுந்து அது சண்டையாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ் தன் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். தற்போது அவரை போலீஸார் கைதுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.