Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

''மின்சாரம் பாய்ந்து தாய் பலி''.. இரவில் இறுதிச் சடங்கு...காலையில் .மகளுக்கு திருமணம்

''மின்சாரம் பாய்ந்து தாய் பலி''.. இரவில் இறுதிச் சடங்கு...காலையில்  .மகளுக்கு திருமணம்
, திங்கள், 27 மார்ச் 2023 (15:42 IST)
நாகர்கோவில் மாவட்டத்தில் கீழபெருவிளையைச் சேர்ந்தவர் சாந்தி, இன்று தன் மகளுக்குத் திருமணன் நடக்கவிருந்த நிலையில், மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் மாவட்டம் பெருவிளை என்ற பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி சாந்தி(51). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இவர்களின் மூத்த பெண் பிரதீஷாவை, எள்ளுவிளையைச் சேர்ந்த வாலிபருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயமிக்கப்பட்டு, இன்று திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இரு வீட்டாரும் திருமண நிகழ்ச்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை கவனித்து வந்தனர்.

நேற்று மதியம் தன் வீட்டிற்கு வந்தவர்களுக்கு உணவு சமைக்க வேண்டி, சாந்தி கிரைண்டரில் மாவு அரைத்துக்கொண்டிருக்குபோது, மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். பலத்த காயமடைந்தவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினர். இதனால், மணமகள் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, சாந்தியின் ஆன்மா சாந்தியடைய  வேண்டுமென்றால் மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நிற்க கூடாது என்று ஊராரும், உறவினர்களும் கூறவே நேற்றிரவு 9 மணியவில் சாந்தியின் பிரேத பரிசோதனை  நிறைவடைந்து, குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, இறுதி நிகழ்ச்சி நடைபெற்று,அவரது உடல் புளியடியில் தகனம் செய்யப்பட்டது.

அதன்பின்னர்.  இன்று  காலையில், பிரதீஷாவுக்கும், இளைஞருக்கும் திருமணம்  நடைபெற்றது. அப்போது, மணமேடையில், மணமகண், பிரதீஷாவைப் பார்த்து, ''உனக்கு  தாயாகாக இருந்து உன்னை வாழ்க்கை முழுவதும் கவனித்துக்கொள்வேன்'' என்று ஆறுதல் கூறினார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உரிமைத் தொகை கிடையாதா? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!