எனது ட்விட்டர் பக்கத்தை முடக்கம் செய்து மர்ம நபர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டார்கள் என்றும் அதற்கு எனக்கும் சம்பந்தமில்லை என்றும் புலம்பெயர் தொழிலாளர் குறித்து வதந்தி பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடியில் பதிவான வழக்கில் ஏற்கனவே அவர் முன்ஜாமின் பெற்ற நிலையில் தற்போது திருப்பூரில் பதிவான வழக்கிற்கு முன் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் எனது ட்விட்டர் கணக்கை முடக்கி தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த தகவலுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதாக வதந்தியை பரப்பிய வழக்கில் பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் முன் ஜாமின் மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது