திமுக ஆட்சியமைத்து முதல் கொரோனா நிதி வழங்கியபோது பெற்றுக் கொண்டு சிரித்த பாட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியமைத்தது. அதை தொடர்ந்து முதலாவது நடவடிக்கையாக ரேசன் கடைகள் மூலமாக மக்களுக்கு கொரோனா உதவி தொகையாக ரூ.4 ஆயிரம் இரண்டு தவணைகளாக அளிக்கப்பட்டது.
அதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் அளிக்கப்பட்டபோது நாகர்கோவிலில் நிதியை வாங்கி கொண்ட வேலம்மாள் என்ற பாட்டி தனது பல் இல்லாதா வாயில் சிரிக்கும் புகைப்படம் வைரலாகியது. சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாகர்கோவில் வந்துள்ளதை அறிந்த பாட்டி முதல்வரை காண சென்றுள்ளார். ஆனால் விருந்தினர் மாளிகைக்குள் அவர் செல்ல காவலர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.
பின்னர் அதிகாரிகள் மூலமாக இந்த தகவல் தெரிய வர விருந்தினர் மாளிகையை விட்டு வெளியே வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து அவரது குறைகளை கேட்டறிந்து, நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.