இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால், எந்த பாதிப்பும் இல்லை என பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொயர் தொடங்கி நடந்து வரும் நிலையில் பல்வேறு திட்டங்கள், தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
இந்நிலையில் பாஜகவினர் சிஏஏ குறித்த தீர்மானத்திற்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதன் பிறகு பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது,
சட்டமன்றத்தில் முதல்வர் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால், எந்த பாதிப்பும் இல்லை. தமிழக முதல்வர் மட்டும் இந்து மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை. ஆனால் அவர் இன்று மத நல்லிணக்கம் பற்றி பேசி உள்ளார்.
நாட்டின் நலம், பாதுகாப்பு கருதியே குடியுரிமை திருத்த சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. எனவே இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால், எந்த பாதிப்பும் இல்லை என சட்டமன்றத்தில் பேசி வெளிநடப்பு செய்து உள்ளோம் என தெரிவித்தார்.