நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறுகிறது. கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடக்கமே பல சர்ச்சைகளோடு ஆரம்பித்துள்ளது.
கத்தாரில் உலகக்கோப்பை நடப்பதால் தமிழகத்தின் நாமக்கல்லில் செயல்பட்டு வரும் முட்டை உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. வழக்கமாக இங்கிருந்து மாதத்துக்கு கத்தாருக்கு 1.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் இப்போது கூடுதலாக 1.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
வீரர்கள் மற்றும் அணியில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டி கூடுதல் முட்டைகள் தேவை ஏற்பட்டுள்ளது.