நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடத்த ஆலோசனை நடந்துவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் நாங்குநேரி எம்.எல்.ஏ வான வசந்த குமார், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்றதால், கடந்த மே மாதம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 14 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் இந்த இரு தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்கள் இல்லை.
இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வேலூர் பாராளுமன்ற தொகுதி இடைத்டேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்தப்படும் என எதிர்ப்பார்த்த நிலையில், வேலூருக்கு மட்டுமே தேர்தல் என தேர்தல் அணையம் அறிவித்தது. வேலூரில் பாராளுமன்றத் தேர்தல் நாளை (05.08.2019) நடைபெறவிருக்கும் நிலையில், அந்த தேர்தல் முடிந்ததும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்த ஆலோசனை நடந்துவருவதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி கூறுகையில், பாராளுமன்ற இடைத்தேர்தல் 9 ஆம் தேதியுடன் முடிந்துவிடுவதால் அதன் பிறகு ஒவ்வொறு மாநிலத்திலும் காலியாக உள்ள சட்டசபை இடைத்தேர்தல் நடத்தபடும்.
தமிழகத்தில் மே, ஜூன் ஆகிய மாதத்திலேயே இரண்டு தொகுதி காலியாகி விட்டது. அதனால் இங்கு நவம்பர் மாதத்திற்குள்ளே இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என திட்ட்மிட்டுள்ளோம் என கூறியுள்ளார்.