அரசியல் மேடைப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத் சிறிது ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் அரசியலில் களம் புகுந்துள்ளார்.
நாஞ்சில் சம்பத் மதிமுகவில் கொள்கைப் பரப்பு செயலாளராக இருந்தார். வைகோவுக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் மதிமுக வில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தார். அங்கே அவருக்கு மேடைப் பேச்சாளராகவும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவராகவும் வேலைக் கொடுக்கப்பட்டது.
அவரும் அதிமுக மேடைகளிலும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளிலும் அதிமுக சார்பாகப் பேசி மற்றக் கட்சிகளை தெறிக்க விட்டார். ஜெயலலிதாவின் இறப்பிற்குப் பிறது டிடிவி அணியில் சிறிதுகாலம் இருந்து பின்பு அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் எல்கேஜி எனும் படத்தில் ஒருக் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார்.
அதன் பின்னர் வரிசையாக படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இதையடுத்து விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியலில் அவர் மீண்டும் ஈடுபடுவாரா என்ற கேள்வி எழுந்தது. அதற்குப் பதிலாக ஆம் என சொல்லுவது போல சமீபத்தில் திமுக வுக்கு ஆதரவாக ஒரு அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார்.
வழக்கம் போல தனது அடுக்கு மொழிப் பேச்சால் ‘திமுக ஒன்றும் தரகுக் கடை இல்லை..தமிழர்களின் கூட்டம்…’ என ஆரம்பித்து அடுக்கிக்கொண்டே போனார். அதைக் கண்டு தொண்டர்கள் ஆரவாரமாகக் கைதட்டி வரவேற்றனர். ஆனால் அந்த பேச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே கடந்த 2016 தேர்தலில் திமுகவைத் திட்டி நாஞ்சில் சம்பத் பேசிய இன்னொரு வீடியோவும் வெளியாகியது. அதில் ‘ திமுகவைப் பற்றி புகழ்ந்த வார்த்தைகளை அப்படியேப் பேசி திட்டியுள்ளார். அதனால் இரண்டு வீடியோக்களையும் இணைத்து நெட்டிசன்கள் நாஞ்சில் சம்பத்தையும் திமுகவையும் கலாய்த்து வருகின்றனர்.