புதுச்சேரியில் அரசுக்கு வருமானமே மதுக்கடைகளில் இருந்துதான் வருகிரது என அம்மாநில முதல்வர் பொது விழா ஒன்றில் பேசியுள்ளார்.
புதுவை அரசின் சமூக நல வாரியம், தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம், சமூக நீதி மற்றும் அதிகார பகிர்ந்தளித்தல் அமைச்சகம் ஆகியவற்றின் சார்பில் மாணவர்கள், இளைஞர்களிடையே போதை விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த கருத்தரங்கில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி கலந்துக்கொண்டார். புதுச்சேரில் மாணவர்களிடம் புழங்கும் போதை பொருட்களுக்கு யார் காரணம் என கண்டுபிடித்து விரைவில் கைது செய்யவும், போதை பொருட்களை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், புதுவையில் மதுவை ஒழிக்க நினைக்கிறோம், ஆனால் அரசுக்கு வருமானம் அதிலிருந்துதான் வருகிறது. மத்திய அரசு நிதி தருவதில்லை. எனவே, நம்மால் மதுவை உடனடியாக ஒழிக்க முடியவில்லை. எனவே நேரத்தை குறைத்து படிப்படியாக குறைக்க திட்டமிட்டி வருகிறோம் என பேசியுள்ளார்.