நெடுவாசலிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேசுடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கோட்டைக்காடு என்ற இடத்தில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
மாவட்ட கலெக்டர் கோட்டைக்காடு போராட்டக் குழுவினருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் பேசி குத்தகைதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட குத்தகை நிலங்களை 9 மாதங்களுக்குள் சுத்தம் செய்து கொடுப்போம் என்று கலெக்டர் உறுதி அளித்ததை ஏற்று, போராட்டத்தை அவர்கள் நிரந்தரமாக வாபஸ் பெற்றனர்.
ஆனால் நெடுவாசலிலும் மற்ற ஊர்களிலும் 17–வது நாளாக போராட்டம் நீடித்தது வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாய் கைவிடும் வரை போராட்டம் நடக்கும் என மக்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.