நேற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், கமல் கட்சியில் சேர்ந்ததாக வெளிவந்த செய்தி குறித்து தமிழிசையும், கமல் கட்சியினர்களும் மாறி மாறி கருத்து மோதல்கள் செய்து கொண்டது சமூக இணையதளங்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாஜ்க தேசிய செயலாளர் எச்.ராஜாவும் நேற்றிரவு தன்னுடைய பெயரையும் கமல் கட்சியில் சேர்க்க வந்த கடிதத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டார்.
ஆனால் நெட்டிசன்கள் இதுகுறித்து எச்.ராஜாவை வறுத்தெடுத்துவிட்டனர். எச்.ராஜா இரவு 11.21க்கு இந்த டுவீட்டை பதிவு செய்தார். அவர் டுவிட் செய்த 5 மணி நேரத்தில் 344 பேர் திட்டி கமெண்ட் அளித்துள்ளனர். இதில் ஒரு விசேஷம் என்னவெனில் இதில் ஒருவர் கூட எச்.ராஜாவை திட்டவில்லை, அவரது அட்மினை திட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எச்.ராஜாவின் டுவிட்டரில் பதிவான கமெண்டுகளில் சிலவற்றை பார்ப்போம்:
எனக்கு என்னமோ @DrTamilisaiBJP , @HRajaBJP இவங்க இரண்டு பேரும் @maiamofficial கமல் கட்சிய பிரபலப்படுத்துறாங்களோனு தோனுது.
டேய் அட்மின் கூமுட்ட... நீ @HRajaBJP சார் கிட்ட வாங்குற அஞ்சு பத்துக்கு ஏன்டா இப்படிலாம் அவர அசிங்கபடுத்தி வரவன் போறவன்டலாம் செருப்படி வாங்கி தர..
சுத்தம்.. மெர்ஸலுக்கு விளம்பரம் குடுத்த மாதிரி, காலியா இருக்கிற மய்யம் ரெஜிஸ்டரேஷன் பேஜுக்கு இந்த ரெண்டு பிஜேபி லூசுங்களே ஆளை கூட்டி விட்டுனிருக்குங்க
சரி சரி ஏன் பஞ்சாயத்த போட்டு வளத்துகிட்டு இருக்கிங்க.நீங்க கமல் பக்கம் போறிங்களா இல்ல கமல் உங்க பக்கம் வறாரானு சட்டு புட்டுனு பேசி ஒரு முடிவெடுங்க.எங்களுக்கு வேற வேலை கெடக்கு.இன்னும் நெறய Entertainment waitingல இருக்கு.இதயே பாத்துகிட்டு இருக்க முடியாது
மிஸ்டு கால் கட்சிக்கும் E-mail கட்சிக்கும் குடுமிபுடி சண்டை Twitter ல்