Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

திருமண இ-பதிவில் புதிய மாற்றம்...இனிமேல் தப்பிக்க முடியாது

திருமண  இ-பதிவில்  புதிய மாற்றம்...இனிமேல் தப்பிக்க முடியாது
, புதன், 19 மே 2021 (18:04 IST)
தமிழகத்தில் இ-பாஸ் முறையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று  முந்தினம் முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ –பாஸ் கட்டாயம் என நடைமுறைப்படுத்தப்பட்டதால் மக்கள் நடமாட்டம் ஓரளவு குறைந்தது. இருப்பினும் திருமணம் என்ற காரணத்தைக் கூறி நிறையப்பேர் வெளியே சுற்றுவதால் இ-பாஸில் திருமணத்தை நிறுத்திவைத்தது.

இந்நிலையில், தற்போது   திருமணம் குறித்த இபாஸ் முறையில் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது தமிழக அரசு.

இந்நிலையில், கொரோனா நோயாளிகள் தனிமையில் இருக்கும்போது வெளியே சுற்றித்திரிந்தால், ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதில். திருமணப் பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் மட்டுமே இனிமேல் இ பாஸ் பதிவு செய்ய முடியும்.

அதேபோல் ஒரு திருமண நிகழ்விற்கு ஒருமுறை மட்டும்தான் இ பாஸ் பதிவு செய்ய முடியும். பத்திரிக்கையில் உள்ள அவைவரது பெயரையும், வாகன எண்களையும்  கட்டாயம் இ பதிவில் குறிப்பிட வேண்டுமென அரசு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது,

இதனால் திருமணத்தின் பெயரில் அநாவசியமாக வெளியே  சுற்ற்வோர் எண்ணிக்கை குறையும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவிலிருந்து மீண்டோருக்கு எப்போது தடுப்பூசி? – மத்திய அரசு விளக்கம்!