புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் அக்டோபர் 9 ஆம் தேதி, அந்தமான் ஒட்டியுள்ள பகுதியில் உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 9 ஆம் தேதி, அந்தமான் ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறக்கூடும்.
எனவே, அக்டோபர் 09 அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனைத்தொடர்ந்து அக்டோபர் 10 அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.