தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் வாங்கிய புதிய பேருந்துகள் ஓட தொடங்கிய இரண்டாவது நாளே நடுரோட்டில் பழுதாகி நின்ற சம்பவம் பயணிகளை அதிருப்தியடைய செய்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக அரசுப் பேருந்துகள் வாங்கப்பட்டன. 52 பேருந்துகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே நடத்துனர் இல்லா 30 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்த புதிய பேருந்துகள் இயக்கத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2ஆம் தேதி தொடங்கி வைத்தார். நாகர்கோயில் - திருநெல்வேலி இடையே இயங்கும் நடத்துனர் இல்லா பேருந்து இன்று நடுவழியில் பழுதாகி நின்றது.
புதிய பேருந்துகள் இயங்க தொடங்கிய இரண்டாவது நாளே இப்படி நடந்தது பயணிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழக பேருந்துகள் சரியாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டை தமிழக மக்கள் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிய பேருந்து பழுது அடைந்த சம்பவம் மேலும் தமிழக மக்களிடையே பேருந்துகளின் தரம் குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது.