இந்திய தேசியக் கவ்லிக் கொள்கையில் கடந்த 34 ஆண்டுகளாக எதுவும் மாற்றம் செய்யப்படாத நிலையில் புதிய தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்குக் கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சுமார் 484 பக்கங்கள் கொண்ட வரைவை மத்திய அரசிடம் 2019 ஆம் ஆண்டு சமர்பித்தது.
இதையடுத்து மத்திய அரசு இந்த வரைவை வெளியிட்டு இதற்கு மக்கள் கருத்துக் கூறலாம் எனத் தெரிவித்தது.
இப்புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை இருந்தததற்கு தமிழகத்திலுள்ள திராவிடக் கட்சிகள் குறிப்பாக எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் இந்திய மற்றும் ஆங்கிலத்தில் வரைவு மொழிபெயர்க்கபட்டது. இது மாநில மொழிகளிலும் மொழிபெயர்க்க கோரிக்கை வைக்கப்பட்டது.
எனவே புதிய கல்விக் கொள்கை அந்தந்த மொழிகளில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக காஷ்மீரி, மலையாளம்,கன்னடம், குஜராத்தி, அசாமி, பெங்காலி, கொங்கணி,மணிப்புரி, பஞ்சாபி,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. இது தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத்திய அரசு வேண்டுமென்றே தமிழைப் புறக்கணித்துள்ளதோ எனக் கேள்வி எழுந்ததால் தமிழக எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், இதற்குப் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று மத்திய அரசு புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழில் வெளியிட்டுள்ளது மத்திய கல்வி அமைச்சகம்.