கோயம்பேடு மார்கெட்டில் இனி காலை 7.30 மணிக்கு மேல் பைக்கிற்கு தடை விதிக்கப்பட்டு புது கெடுபிடிகள் அறிமுகம் செய்ப்பட்டுள்ளது.
கடந்த மாதம் முதலாக இந்தியாவில் தீவிரம் காட்ட துவங்கிய கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் காய்கறி விற்பனை, அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கான கால நேரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நாளை காலை 7.30 மணி முதல் இருகச்சர வாகனங்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறி, மலர்கள் வாங்க பைக்கில் வரும் வியாபாரிகள் காலை 4 மணி முதல் 7.30-க்குள் வர வேண்டும். தடையை மீறி மார்க்கெட் வளாக பகுதிக்கு வருபவர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
3 மற்றும் 4 சக்கர சரக்கு வாகனங்களை கொண்டு வந்து காய்கறிகளை வாங்க நேரக்கட்டுப்பாடு இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.