Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசுகள் வெடிக்கத் தடை

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசுகள் வெடிக்கத் தடை
, சனி, 30 டிசம்பர் 2023 (18:40 IST)
நாளை புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அதிகமாக மக்கள் கூடும் கடற்கரை, வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட இடங்களில் 18000போலீஸார் மற்றும் 100 ஊர்காவல் படையினர் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர்.

சென்னையில் 420 இடங்களில் வாகன தணிக்கை செய்யப்படவுள்ளது. வாகன ரேஸ்  நடப்பதைத் தடுக்க 25 கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதில்,

*பைக் ரேஸில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

*பெண்கள் மீதான குற்றங்கள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

*பெசண்ட் நகர் கடற்கரையின் 6 வது அவன்யூ சாலைகள் மூடப்படும்.

*வார் மெமோரியன் முதல் லைட் ஹவுஸ் வரை 8 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,

*கேளிக்கை விடுதிகள், ரிசார்டுகள்  ஆகிய இடங்களில் போதை பொருட்கள் பயன்படுத்தக்கூடாது.

*மதுபானம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்.
சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் மூடப்படும்.

*புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

*சென்னை முழுவதும் அதி நவீன 6471 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், ஸ்பீடு, வீலிங், ரேஸிஸ் செய்தால் தானாகப் பதிவு செய்து தகவல் அளிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

மேலும், புத்தாண்டு கொண்டாட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புத்தாண்டு கொண்டாட்டம்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு