சிலிண்டர் விலை உயர்வு ஏன் என காஞ்சிபுரம் மாவட்ட கிராம மக்களின் கேள்விக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாஜகவின் சுவர் விளம்பர நிகழ்ச்சியை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
அப்போது அங்கு இருந்த கிராமத்து பெண்கள் அமைச்சரிடம் சிலிண்டர் எரிவாயு விலை ஏன் உயர்கிறது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய அவர் சிலிண்டரில் நிரப்பக்கூடிய சமையல் எரிவாயு நமது நாட்டில் இல்லை என்றும் அதை இறக்குமதி தான் செய்கிறோம்
அரசு இதுவரை தன் கையில் இருந்து 600 ரூபாய் போட்டு உங்களுக்கு சிலிண்டர் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியது. ஆனால் இப்போது விலையை குறைக்க வேண்டுமானால் அரசிடம் பணம் இருக்க வேண்டும் இல்லையா? அதனால் தான் அந்த பணத்தை நாங்கள் மற்ற திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்