அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி. இவர் அக்கல்லூரியில் படித்து வந்த மாணவிகளை ஆசை வார்த்தைகள் கூறி..தவறான பாதைக்கு அழைக்க முயன்றதாக கடந்த வருடம் பெரும் பரபரப்பானது. எனவே கடந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேது நிர்மலா தேவியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது நிர்மலாதேவிக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்க்லி நிர்மலாதேவியுடன் கைது செய்யப்பட்டிருந்த பேராச்சிரியர் கருப்பசாமி, முருகன் அண்மையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று நிர்மலாதேவிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.