இன்று முதல் அனைத்து கடற்கரைகளிலும் அனுமதி இல்லை: சென்னை மாநகராட்சி!
சென்னையில் இன்று முதல் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையிலுள்ள மெரினா கடற்கரை உள்பட பல கடற்கரைகளில் சனி ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பொதுமக்கள் குவிந்து வருவது உண்டு என்பதும் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களாக விளங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக சென்னையில் மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளிலும் இன்று முதல் அதாவது ஜனவரி 2 முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
ஏழை எளிய மக்களின் ஒரு சுற்றுலாதலமாக விளங்கி வரும் கடற்கரைகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.