சென்னையில் இன்று காலை 7 மணிக்கு சில இடங்களில் உணரப்பட்ட நில அதிர்வால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் சென்னைக்கு வடகிழக்கில் 600 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று காலை 7 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்து விளக்கமளித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் ‘ இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. கடலுக்கடியில் உருவான இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சென்னையில் சில பகுதிகள் மற்றும் அந்தமானின் சிலப் பகுதிகளில் உணரப்பட்டுள்ளன. சில நிமிடங்கள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.