Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தாலிக்கு தங்கம் இனி இல்லை... புது விதிமுறைகள் வந்தாச்சு!

தாலிக்கு தங்கம் இனி இல்லை... புது விதிமுறைகள் வந்தாச்சு!
, புதன், 1 செப்டம்பர் 2021 (11:22 IST)
தமிழக அரசு வழங்கும் தாலிக்கு தங்கம் உதவித்தொகை கிடைப்பதில் சில விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் ரூ.25,000 மற்றும் ரூ.50,000 திருமண நிதியுதவி தொகையுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டத்தில் சில விதிமுறைகளை பின்பற்ற தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 
 
வீட்டில் யாரேனும் அரசு பணியில் இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது திருமண நிதியுதவித்திட்டத்தின் கீழ் பயன் பெற்றிருந்தாலோ இந்த தொகை கிடைக்காது
 
மணமகளுக்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும் நிரம்பியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். 
 
விண்ணப்பிக்கும் மனுதாரர் மாடி வீடு, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தால் உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.
 
குடும்ப ஆண்டு வருமான சான்றினை ரூ.72,000-க்குள் சமர்த்திருக்க வேண்டும். 
 
திருமண மண்டபங்களில் நடந்த திருமணங்களுக்கு நிதியுதவி தொகை வழங்கப்படாது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்கள் விலை அதிகரிப்பு! – மதுப்பிரியர்கள் ஷாக்!