தமிழகத்தில் பொங்கல் விடுமுறையாக ஜனவரி 15 முதல் ஜனவரி 17 வரை அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று இன்று காலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்திருந்தார்கள். எனவே ஜனவரி 13 முதல் பொங்கல் விடுமுறை என்ற அறிவிப்பு வெளிவரும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்
இந்த நிலையில் இப்போது வரை இது குறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை என்பதும் இனிமேலும் வர வாய்ப்பில்லை என்றும் அரசு வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன. எனவே ஜனவரி 13 மற்றும் ஜனவரி 14 ஆகிய இரண்டு நாட்களும் வேலை நாட்கள் என்ற கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்
இருப்பினும் ஒரு சில ஆசிரியர்கள் இதுகுறித்து கருத்து கூறிய ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் விடுமுறை விடப்பட்டால் அதற்கு பதிலாக இரண்டு சனிக்கிழமைகளில் வேலை செய்ய வேண்டும். நாங்கள் சனிக்கிழமைகளில் வேலை செய்வதை விரும்பவில்லை எனவே விடுமுறை அளிக்காதது எங்களுக்கு சந்தோசமே என்று கூறியுள்ளனர். இருப்பினும் வெளியூர் செல்லும் ஊழியர்கள் தொடர்ச்சியான விரும்பினால் கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.